130வது வருடம்: ஈபிள் கோபுரத்தில் கண்கவர் ஒளி ஜாலம்!

பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்ட 130வது ஆண்டு நிறைவையொட்டி கோலாகலமான கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம், உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. 1889ம் ஆண்டு இதே நாளில் தான் ஈபிள் கோபுரம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

1887ம் ஆண்டு ஈபிள் கோபுரத்தை வடிவமைக்க தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு தான் முடிவு பெற்றது. சுமார் 10 ஆயிரம் தொன் எடைக்கொண்ட ஈபிள் கோபுரம், 324 மீற்றர் உயரம் கொண்டது.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் ஈபிள் கோபுரம் 6 இன்ச் வளர்கிறது என்றும் குளிர்காலங்களில் அதே அளவு சுருங்குவதாகவும் கூறுகின்றனர். காற்று பலமாக வீசும் போது டவரின் உச்சிப் பகுதி 6 லிருந்து 7 மீ. வரை முன்னும் பின்னும் அசையும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

இந்த கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்நாட்டு அரசு நேற்று கொண்டாடியது. ஈபிள் கோபுரத்தில் வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சியை பலர் ஆர்வமாக கண்டு இரசித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here