முன்னாள் நட்சத்திரம் மர்ம மரணம்!


WWE முன்னாள் நட்சத்திரமும், பிளேபோய் மொடலுமான ஆஷ்லி மாஸரோ உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கநிலையில் இருந்தவரை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் அங்கு உயிரிழந்தார்.

39 வயதான ஆஷ்லி மாஸரோ 2005ஆம் ஆண்டு WWE போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். 2008 இல் அதிலிருந்து விலகி மொடலாக செயற்பட்டு வந்தார்.

நியூயோர்க்கில் உள்ள லோங் ஐஸ்லண்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று மயக்கமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணத்தில் குற்றச்சம்பவங்கள் எதுவுமில்லை, இயற்கை காரணங்களாலேயே மரணம் நிகழ்ந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here