வாய்வெடித்து இளம்பெண் மரணம்!


உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு விநோதமான சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் வாய் வெடித்து மரணித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை அவரது உறவிறனர்கள் சிகிச்சைக்காக உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்து வந்துள்ளனர். சிகிச்சையின் போது வாயில் வெடி விபத்து நிகழ்ந்து சிகிச்சையின் போது இளம்பெண் இறந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம் எனவும், சிகிச்சைக்கா வந்தவுடன் அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்ட போது வேதி மாற்றம் நிகழ்ந்து அவரது வாயில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த கெடூர விபத்தில் காட்சிகள் வீடியோவாக அறையில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மருத்துமனை நிர்வாகம் தெரிவிக்கையில்., இளம்பெண் மரணம் குறித்து உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. மருத்துவர்கள் குழுவின் ஆழ்ந்த ஆய்விற்கு பின்னர் இளம்பெண் இறப்பிற்கான காரணம் உறுதியாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here