இணுவில் மத்திய கல்லூரி சுற்றுமதிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இணுவில் மத்திய கல்லூரியின் மைதானத்திற்கான சுற்று மதில் அமைப்பதற்கு அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் கம்பெரலிய திட்ட நிதியில் ஒரு மில்லியன் ருபா செலவில் மைதான சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் துரைசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஐதீபன், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here