தல 60 படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஓகஸ்ட் 10 ஆம் திகதி ரிலீசாக இருக்கிறது.

அஜித் அடுத்ததாக மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய கதையில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் தற்போது வௌியாகியுள்ளது. கமல் படத்திற்கு தொடர்ச்சியாக இசையமைத்து வந்த ஜிப்ரான் தான் அஜித்தின் 60 வது படத்தில் இசையமைக்க இருக்கிறார்.

தல 60 வது படத்திற்கு நான்கு பாடல்களும் ஒரு தீம் மியூசிக் கம்போஸ் பண்ண இருக்கிறாராம் ஜிப்ரான். மேலும் படத்தில் நிக்கி கல்ராணியும் ஒரு பாலிவுட் நடிகையும் நடிக்க இருக்கிறார்களாம். இதில் பாலிவுட் நடிகை நெகட்டிவ் ரோல் என கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here