தலைமன்னார் புனித லோறன்சியார் பாடசாலையில் புதிய கட்டட திறப்புவிழா

தலைமன்னர் புனித லோறன்சியார் பாடசாலையில் இன்று (16) காலை புதிய கட்டடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இப் பாடசாலையில் நீண்டகாலமாக மாணவர்களின் பொதுநோக்கத்திற்கான மண்டபம் ஒன்று இல்லாமை குறையாக காணப்பட்டது. குறிப்பாக நிகழ்வுகளை நடாத்துவதற்கான பொதுநோக்கு மண்டபமற்ற நிலை காணப்பட்டது. இக் குறையானது இன்றையதினம் தீர்க்கப்பட்டுள்ளது.

லக்ஸ்மிகெண்டர் என்னும் நன்கொடையாளரின் நிதிஒதுக்கீட்டின் கீழ் தலைமன்னார் பியர் கடற்படை அதிகாரிகளினால் இம் மண்டபம் புனரமைக்கப்பட்டு இன்றையதினம் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here