காத்தான்குடி பேருந்தில் மீட்கப்பட்ட ஜிபிஎஸ்!

சித்தரிப்பு படம்

காத்­தான்­கு­டியில் இருந்து கொழும்­புக்கு சென்ற பேருந்தில் பொதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு 2 ஜி.பி.எஸ்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 5 ஜி.பி.எஸ்கள் மீட்கப்பட்டன.

நேற்றுப் புதன்­கி­ழமை இந்த சம்பவம் நடந்தது.

கொழும்பு சென்ற பேருந்தை கல்­லடிப் பாலத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள சோதனைச் சாவ­டியில் காலை 9 மணி­ய­ளவில் விசேட அதி­ர­டிப் ப­­டை­யினர் சோதனை­யிட்­டனர். இதன்­போது பேருந்தின் முன்­ப­கு­தியில் பொதி­ ஒன்றைக் கண்டு அது­ யா­ரு­டை­யது என
வின­வினர். அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில், பேருந்து நடத்­துநர் காத்தான்குடியிருந்து வர்­த்தகர் ஒருவர் கொழும்பில் குறித்த விலா­சத்திலிருந்து வந்து பொறுப்­பேற்பார் என தம்­மிடம் வழங்­கி­ய­தாக தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் அந்தப் பொதியை உடைத்து சோதனை செய்­த­போது அதில் இருந்து இரு ஜி.பி.எஸ். இருப்­பதை கண்டு, நடத்­து­நரைக் கைது செய்­த­துடன், பொதியை வழங்­கிய காத்­தான்­குடி வர்த்­தக நிலை­யத்­துக்குச் சென்று சோத­னை­யிட்­டனர். அங்­கி­ருந்து 5 ஜி.பி.எஸ்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து வர்த்தகரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here