காங்கேசன்துறை கடலில் கஞ்சாவுடன் மூவர் கைது!

காங்கேசன்துறை கடற்பரப்பில் 77 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக் கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இருவர், மன்னாரைச் சேர்ந்த ஒருவர் அடங்கலாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

காங்கேசன்துறை கற்பரப்பில் கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போதே நேற்றிரவு கஞ்ஞாவுடன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடற்படையினர் மற்றும் தேசிய போதை தடுப்பு பிரிவினர் இணைந்து இந் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here