பேஸ்புக்கில் போலித்தகவலை பகிர்ந்த பல்கலைகழக மாணவனிற்கு விளக்கமறியல்!

பேஸ்புக்கில் தவறான செய்தியை பகிர்ந்த பல்கலைகழக மாணவனின் விளக்கமறியல் இம்மாதம் 23ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சீன பயணம் தொடர்பான தவறான தகவலொன்றை அவர் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் அவர் முற்படுத்தப்பட்டார். ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக மாணவனான அவரை விளக்கமறியலில் வைக்க பொலிசார் கோரினர். எனினும், பிறிதொருவரின் பதிவையே மாணவன் பகிர்ந்ததாக, மாணவனின் சட்டத்தரணி தெரிவித்தார்.

எனினும், தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து பகிர்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையென குறிப்பிட்ட நீதிவான், மாணவனை 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here