ஆசிரியை மீது தாக்குதல்!


யாழில் ஆசிரியை மீது மர்மநபர்கள் கூரிய ஆயுதத்தால் கீறிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அராலி வள்ளியம்மை மகாவித்தியாலயத்திற்கு அருகில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. காலை 7.25 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் பண்டரித்தரிப்பை சேர்ந்த 35 வயதான ஆசிரியையே பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது மோட்டார்சைக்கிளில் ஆசிரியை பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையை நெருங்கும் நிலையில், இருவர் அவரை வழிமறித்து, அருகிலுள்ள வீதியில் மாணவியொருவர் வீதியில் அழுதவாறு நிலத்தில் விழுந்து கிடக்கிறார் என தெரிவித்தனர்.

இதனால் பதற்றமடைந்த ஆசிரியை, மோட்டார்சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த வீதிக்கு சென்றார். அங்கு எவருமில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியை, மோட்டார்சைக்கிளை திருப்பிக் கொண்டு வர முற்பட்டார். அப்போது அந்த மர்மநபர்கள் இருவரும் ஆசிரியை முந்திக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பின்னரே தோள்மூட்டில் வித்தியாசத்தை உணர்ந்த ஆசிரியை, தோள் மூட்டில் கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டுள்ளதை அவதானித்தார். தன்னை முந்திச்செல்லும்போது கூரிய ஆயுதத்தால் கீறப்பட்டிருக்கலாமென அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here