மனைவியையே பார்த்துக் கொள்ளாத மோடி எப்படி நாட்டை பார்ப்பார்?

கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, மனைவியை கவனிக்கத் தெரியாத மோடி, நாட்டை எப்படி கவனிப்பார் என்று சூடாக விமரிசித்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) மேற்கொண்ட தேர்தல் பிரசார பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, அம்மாநிலத்தில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 9 மக்களவைத் தொகுதிகளில் நாளையுடன் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்திதார்.

அப்போது பேசிய அவர்,

அமித் ஷா தனது பேரணியின் மூலம் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார். ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மோடி அது குறித்து இன்றைக்கு வருத்தம் தெரிவிக்கவே இல்லை. மேற்கு வங்க மக்கள் இதை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமித் ஷா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தினார். அதன் விளைவு தான் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பா? மேற்கு வங்கம் அஞ்சவில்லை. நான் மோடிக்கு எதிராக பேசுவதால் தான் மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் பாஜகவின் கீழ் செயல்படுகிறது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். நேற்றைய வன்முறைக்கு காரணம் அமித் ஷா. தேர்தல் ஆணையம், அமித் ஷாவிடம் விளக்கம் கேட்டு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இருந்த வன்முறையே நேற்று இங்கு நிகழ்ந்தது. ரௌடிகள் வெளியே இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காவி நிறம் அணிந்து வன்முறையை ஏற்படுத்தினர்.

தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்ற, அரசியல் சார்புடைய முடிவு. பிரதமர் மோடிக்கு அவரது இரண்டு பேரணிகளை முடித்துக்கொள்வதற்காக நேரம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் (நரேந்திர மோடி) மனைவியையே உங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி நாட்டை பார்த்துக்கொள்ள போகிறீர்கள்? என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here