கொச்சிக்கடையில் வெடித்த வாகனத்தை வாங்கியவர் காத்தான்குடியில் கைது!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடியில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முஹமட் ஆதம் லெப்பை என்பவரே கைதாகியுள்ளார்.

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் தற்கொலை தாக்குதலை நடத்தியவர், இந்த வாகனத்தில் குண்டு பொருத்தப்பட்ட நிலையில் வீதியோரமாக நிறுத்தி விட்டு சென்றிருந்தார். எனினும், அதனுள் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடிக்கவில்லை. 22ம் திகதி இந்த வாகனம் அடையாளம் காணப்பட்டு, குண்டு செயலிழக்க செய்யப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 85 பேர் இதுவரை கைதாகியுள்ளனர். அவர்களில் 10 பேர் பெண்கள். கைதானவர்களில் 65 பேர் சிஐடியின் விசாரணையிலும், 20 பேர் ரிஐடியின் (பயங்கரவாத தடுப்பு பிரிவு) விசாரணையிலும் உள்ளனர்.

இதுவரையான விசாரணைகளில் சஹ்ரான்குழு பாவித்த 17 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 7 இடங்கள் பயிற்சி மையங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு இடங்களாக இருந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here