செப்பு தொழிற்சாலை ஊழியர்களை பிணையில் விடுவித்த நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு!

கொழும்பு மாவட்ட நீதிபதி பிரியந்த லியனகே மீது விசாரணை நடத்த வேண்டுமென, நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி செனரத் ஹேவவிதான.

வெல்லம்பிட்டி செம்பு தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட 9 பணியாளர்களையும் கொழும்பு மாவட்ட நீதிவான் பிணையில் விடுவித்திருந்தார். அவர்கள் மீது போதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லையென குறிப்பிட்டே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேகநபர்களை விடுவித்தால் அமைதியின்மை ஏற்படுமென பொலிசார் நீதிமன்றில் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது. அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிசார் கோரினர் என்றும், ஆனால் நீதிபதி அவர்களை பிணையில் விடுவித்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here