மைத்திரி- ஜின் பிங்க் சந்திப்பு: பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தழிக்க சீனா முழுமையான உதவியை செய்யுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்க்.

இன்று மாலை இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசினர்.

சந்திப்பு தொடர்பாக சீன ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்-

பாதுகாப்பு தேவைகளிற்காக 260 பில்லியன் நன்கொடை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு 100 பொலிஸ் ஜீப்பை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 150 மில்லியன் பெறுமதியுடையது.

இரண்டு நாட்டு பாதுகாப்பு துறையும் ஒன்றிணைந்து செயற்பட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

உலகின் எந்த பகுதியில் நடந்தாலும், கொடூர பயங்கரவாதத்தை கண்டிப்பதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரண்டு நாட்டு பாதுகாப்புத்துறை உறவை வலுப்படுத்துவதுடன், உளவுத்தகவல் பரிமாற்றம் செய்ய இணக்கம் காணப்பட்டது.

பயங்கரவாதத்தை பரப்புவதை, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான தகவல்களை பரப்புபவர்களையும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் தொழில்நுட்ப உதவி அவசியமென்பதை இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த தொழில்நுட்பங்களை வழங்க சீன ஜனாதிபதி உடன்பட்டார்.

இலங்கையில் சீன கடனுதவியில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர் என அதில் குறிப்பிடப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here