நோர்வூட் ஆடைத்தொழிற்சாலை பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் நோர்வூட் பிரதேச சபை தலைவர்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் பல மலையக ஊழியர்கள் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருகின்றனர். எனவே அவர்கள் பாதுகாப்பாக தொழில்புரிய வேண்டுமென குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள உத்தியோகத்தர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுரைகளை வழங்கினார் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேல்.

எவ்விதமான சந்தேகத்திற்கிடமான பொருளோ,நபரோ தென்பட்டாலும் அதுதொடர்பான விபரங்களை அறிவிக்குமாறு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(நீலமேகம் பிரசாந்த்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here