புறா பந்தயம் பற்றிய கதை

டி.கே. புரொடக்ஷன்ஸ் சார்பாக, வி.துரைராஜ் தயாரிக்கும் முதல் படம் பைரி. குறும்பட இயக்குனர் ஜான் கிளாடி இயக்குகிறார். 25க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத், இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அருண்ராஜ் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஜான் கிளாடி கூறியதாவது: புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது பைரி.

நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் படம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here