இந்தவார ராசி பலன்கள் (12.5.2019- 18.5.2019)

 

ராகு, செவ்வாய், குரு, சுக்கிரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். நற்பெயரும், புகழும் தேடி வரும். வாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலையில் சிறந்து விளங்குவர். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நலன் பேணுவார். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்கள் தங்கள் பணிசார்ந்த தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

சுக்கிரன், சந்திரன் ஓரளவு அனுகூல பலன் தருவர். சுற்றுச்சூழல் உணர்ந்து பணிபுரிவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். வீடு வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக அமைந்திட இதமாக வழி நடத்துங்கள். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி குடும்ப ஒற்றுமைக்காக சில செயல்களை மேற்கொள்வார். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். புதியவர்களின் ஆதரவால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றவும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேற இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு சங்கடம் போக்கும்.

சுக்கிரன், குரு, சந்திரனால் வியக்கத்தகு நற்பலன் கிடைக்கும். புதிய யுக்தியுடன் பணிகளை துவங்குவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்; பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதல்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வர். குடும்பத்தில் சுபநிகழ்வு நடந்தேறும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும். மனைவியின் செயல் பாராட்டும்படி அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவினால் சேமிப்பும் கூடும். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு தேவையான உதவியை வழங்குவர். மாணவர்களின் ஞாபகத்திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு நல்வாழ்வு தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் சிறப்பான நற்பலன் தருவர். நினைத்த காரியம் நிறைவேற அனுகூலமான சூழல் ஏற்படும். சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் பணிபுரிவீர்கள். உடன் பிறந்தோருக்கு உதவுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் செயல்களில் நேர்மை மிகுந்திருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் நிலுவை பணிகளை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

குரு, சுக்கிரன், ராகு, செவ்வாய் ராஜயோக பலன் தருவர். மனதில் தெளிவான சிந்தனை பிறக்கும். முக்கிய தருணத்தில் நண்பரின் உதவி கிடைக்கும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு செயல்திறன் மேம்படும். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து அன்பு பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பாராட்டு, பரிசு பெறுவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நிம்மதி தரும்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். செயல்களில் சமயோசிதமாக ஈடுபட வேண்டும். நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். குடும்பத்திற்கான பணச்செலவு அதிகரிக்கும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு அவசியம். பிள்ளைகளின் செயல்களை கவனித்து வழி நடத்துங்கள். இஷ்டதெய்வ வழிபாடு சில நன்மைகளைத் தரும். மனைவி குடும்பநலன் சிறக்க நல்ல ஆலோசனை சொல்வார். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அளவுடன் இருக்கும். பணியாளர்கள் கூடுதல் பணிச் சுமை ஏற்படும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் புதியவர்களுடன் நிதானித்து பழகவும்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

புதன், கேது, சனீஸ்வரர், சந்திரனால் சுப பலன் ஏற்படும். சுமூகமான நிகழ்வுகள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் நல்ல சிந்தனைகள் வெளிப்படும்; படிப்பிலும் முன்னேறுவர். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்கவும். மனைவியின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு தேவையான உதவியை வழங்குவர். மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனையை மதித்து செயல்படுவர்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

சூரியன், புதன், குரு. சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். வாழ்வில் முன்னேற கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. வீட்டில் ஒற்றுமை நிலைத்திருக்கும். பிள்ளைகள் பெற்றோரிடம் நண்பரைப் போன்று பழகுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமையை சேர்த்திடும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம்: 8.5.19 அதிகாலை 4:51 மணி 10.5.19 காலை 8:37 மணி
பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு நற்பலன் தரும்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். செயல்களை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பாசம் மனதில் ஊக்கம் தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் கல்வித் திறனில் மேம்பட உதவுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப தேவைகள் சிக்கன பணச்செலவில் பூர்த்தியாகும். மனைவியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமயோசிதமாக எதிர்கொள்வீர்கள். பணியாளர்கள் நேர்த்தியுடன் பணிபுரிவர். விண்ணப்பித்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சந்திராஷ்டமம்: 10.5.19 காலை 8:38 மணி முதல் 11.5.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு அளப்பரிய நற்பலன் வழங்குவர். சமயோசிதமாக செயல்படுவீர்கள். பணிகளில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் நல்ல பலன் தரும். சமூக நிகழ்வு இனியதாக அமைந்திடும். புதிய வாகனம் விரும்பியபடி வாங்கலாம் .பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க தேவையானதை செய்வீர்கள். சத்தான உணவும், சீரான ஓய்வும் பின்பற்றி உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவீர்கள். மனைவியின் அன்பு நிறைந்த சொல்லும், செயலும் குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் புத்தாடை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியை தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் தாராள நற்பலன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் உதவி எதிர் பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சீராகும். திட்டமிட்டபடி புதிய வீடு, வாகனம் வாங்கலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் செயலாற்றலில் முன்னேற்றம் காண்பர். எதிரி சொந்த சிரமங்களால் இடம் மாறுவர். மனைவி வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி புதிய சாதனையை ஏற்படுத்தும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணிபுரிவர்; சலுகையும் கிடைக்கும். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் புதிய முயற்சிகளில் இறங்குவர்.

சந்திராஷ்டமம்: 14.5.19 பகல் 1:33 மணி 16.5.19 மாலை 4:07 மணி
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபவாழ்வு தரும்.

சூரியன், சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். மனதில் இரக்க சிந்தனை அதிகரிக்கும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பூர்வ சொத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் குழப்பமான எண்ணங்களை சரிசெய்வீர்கள். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் அன்பும், பாசமும் மனதில் நம்பிக்கையை தரும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பு பணவரவை சீராக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படுவர். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள்; படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 16.5.19 மாலை 4:08 மணி 18.5.19 இரவு 9:09 மணி
பரிகாரம்: துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here