ஸ்கொட்லாந்தை வீழ்த்திய ஆப்கான்!


ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை முன்னிட்டு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்தில் ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. இதில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கான் அணி டக்வொர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியுள்ளது.

முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து அணி சி.எஸ்.மெக்லியாடின் அற்புத சதத்துடன் (89 பந்தில் 100, 10 நான்குகள் 1 ஆறு), 50 ஓவர்களில் 325/7 என்று பெரிய இலக்கை நிர்ணயித்தது. ஆனால் ஆப்கான் அணி மகாவிரட்டலில் ஈடுபட்டு 44.5 ஓவர்களில் 269/3 என்று இருந்த போது மழைக்காற்று வீசத் தொடங்க ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் ஆப்கான் அணி டக்வொர்த் முறைப்படி தேவைப்படும் ரன் அளவைக்காட்டிலும் அதிகம் எடுத்திருந்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்று கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் அணியின் வன் டவுன் வீரர் ரஹ்மத் ஷா 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 113 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் மொகமது ஷஜாத் 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுக்க, ஹஸ்மத்துல்லா ஷாகிதி 60 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். முன்னாள் கப்டன் அஷ்கர் ஆப்கான் 22 நொட் அவுட்.

எடின்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்கொட்லாந்து வீரர் மெக்லியாட் ஆப்கானுக்கு எதிராக தன் 2வது சதத்தை எடுக்க கப்டன் கொயட்சர் 79 ரன்களை விளாசினார். கடைசி 10 ஓவர்களில் ஸ்கொட்லாந்து 99 ரன்களை விளாசியது. அந்த அணியின் மன்சே 13 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 28 ரன்கள் எடுக்க அபாய வீரராகக் கருதப்படும் சிடி.வாலஸ் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதில் குல்பதீன் நயீப் வீசிய ஒரே ஒவரில் 21 ரன்கள் பின்னி எடுத்தார் மன்சே.

ஆப்கான் தரப்பில் புதிய கப்டன் குல்பதீன் நயீப் 10 ஓவர்களில் 72 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்தாப் ஆலம், ஹமித் ஹசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலக்கை விரட்டும் போது ஆப்கான் அணி ஆக்ரோஷமாக ஆடியது முதல் 10 ஓவர்களில் 58 ரன்கள் வந்தது. ஷசாத், ரஹ்மத் இணைந்து 93 ரன்களை வேகமாகச் சேர்த்தனர். ஷஜாத் தன் அரைசதத்தை 61 பந்துகளில் எடுத்தார். 44.4 ஓவர்களில் டி.எல். முறைப்படி ஆப்கான் 267 ரன்கள் எடுத்து சரிசம ஸ்கோரை எடுத்திருந்தது. அப்போது மழை கொஞ்சம் வலுவாகவே பெய்யத் தொடங்கியது. பந்துவீச்சாளர் இவான்ஸ் பந்தை வீச தயாராக இருந்தார். நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் தர்மசேன அசையவில்லை. 5வது பந்தில் விக்கெட் எடுத்திருந்தால் ஸ்கொட்லாந்து டி.எல். முறைப்படி வெற்றி பெற்றிருக்கும், ஆனால் அந்த பந்தில் ஆப்கான் 2 ரன்களை எடுக்க வெற்றி உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here