5-3-2… மகிழ்ச்சிக்கான பாஸ்வேர்டு

மனித மூளை இயல்பாகவே அச்சுறுத்தல் மற்றும் குறைபாடுகள் போன்ற எதிர்மறை விஷயங்களில் கவனத்தைக் குவிக்கும். இதனால் தேவையற்ற கவலை உருவாகி, மகிழ்ச்சி பறிபோகும். ஆனால், சில செயல்பாடுகள் மூலம் அதை மாற்றிவிட முடியும். மனித மூளையில் இரண்டு பயன்முறைகள் உள்ளன.

1.இயல்புநிலை 2.கவனம் குவித்தல்.

இயல்புநிலை

50 முதல் 80 சதவிகித நேரத்தை மூளை இயல்பான விஷயங்களுக்குப் பயன்படுத்தும்.

* மனம் அலைபாய்வது.

* தவறுகளையும், அச்சுறுத்தும் விஷயங்களையும் தேடிக்கொண்டே இருப்பது.

* செய்ய இயலாத காரியங்கள் மீது மூர்க்கம்.

கவனம் குவித்தல்

* புதிய அல்லது சுவாரஸ்யமான விஷயங்களில் ஈடுபடுவது.

* மகிழ்ச்சியாக இருப்பது.

5-3-2 என்ற திட்டத்தைச் செயல்படுத்தினால் மூளையின் செயல்பாட்டை இயல்புநிலையிலிருந்து கவனம் குவித்தல் நிலைக்கு மாற்ற முடியும்.

5 பேர் ஒவ்வொரு நாளையும் நன்றியுடன் தொடங்குங்கள்!

* காலையில் எழுந்ததும் நீங்கள் நன்றியுடன் நினைவுகூர விரும்பும் ஐந்து பேரின் மீது கவனம் செலுத்துங்கள்.

* அவர்களுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

2 விநாடிகள் வித்தியாசமான பார்வை!

* ஒருவரை எதிர்கொள்ளும்போது ‘நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்’ என்று மனதில் வாழ்த்திவிட்டு பேச்சைத் தொடங்குங்கள்.

* உங்கள் மனம் ஒருவரைப் பற்றி எதிர்மறையாக மதிப்பிடுவதற்கு முன்னர், நேர்மறையான கண்ணோட்டத்தை அவர் மீது பதித்துவிடுங்கள்.

3 நிமிடங்கள் அன்பிருக்கும் இடத்தில் புதுமையைக் கண்டுபிடியுங்கள்.

* ஒரு நாள் நிறைவடையும் முன்னர் மனதுக்கு நெருக்கமான, ஆனால் சில மாதங்களாகச் சந்திக்காத நபரைச் சந்தித்து, அவருடன் குறைந்தது 3 நிமிடங்களைச் செலவழியுங்கள்.

* அந்த நபருடன் இயல்பான நட்பை வெளிப்படுத்துங்கள்.

* அவரை மதிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, நட்பை வலுப்படுத்துங்கள்.

இந்தத் திட்டத்தைப் பின்பற்றி மனதின் இயல்புநிலையைத் தொடர்ந்து மாற்றிப் பழகினால், நரம்பியலில் மாற்றங்கள் ஏற்பட்டு, மகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். மூளையின் செயல்பாட்டை இயல்புநிலையிலிருந்து கவனம் குவித்தல் நிலைக்கு மாற்ற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here