மோடியை பதவிநீக்க விரும்பிய வாஜ்பாய்: வெளியாகும் புது தகவல்!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்திருந்தார் என முன்னாள் பா.ஜ தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்கா, முன்னாள் பிரதமர் ராஜிவ் ஐஎன்எஸ் விராத் போர் கப்பலை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சையை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், குஜராத் கலவரத்திற்கு பிறகு மோடியை ராஜினாமா செய்ய வைக்க வாஜ்பாய் முடிவு செய்திருந்தார். ஒருவேளை மோடி பதவி விலக மறுத்தால் குஜராத் அரசை கலைக்க நினைத்திருப்பதாக 2002 ம் ஆண்டு கோவாவில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கூறினார்.

இது தொடர்பாக கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. எனக்கு தெரிந்த வகையில், மோடி அரசை கலைக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். அப்படி மோடி அரசை கலைத்தால் தான் பதவி விலக போவதாக வாஜ்பாயிடம் கூறியிருந்தார். அதனால் வாஜ்பாயும் மோடி அரசை கலைக்கும் முடிவை கைவிட்டார். மோடியும் முதல்வராக தொடர்ந்தார்.

போர் கப்பலை ராஜிவ் தவறாக பயன்படுத்தவில்லை என முன்னாள் கடற்படை அதிகாரிகளே தெளிவுபடுத்தி விட்டனர். அப்படி இருந்தும் இது போன்ற பொய்களை பேசுவது பிரதமரின் தகுதி சரியானது அல்ல. லோக்சபா தேர்தல், மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான போட்டியே தவிர நாட்டின் வரலாற்றின் மீதானது அல்ல. தேர்தல் சமயத்தில் பாகிஸ்தான் பற்றி விவகாரத்தை எழுப்புவது துரதிஷ்டவசமானது. மோடி அரசு தவறான புள்ளி விபரங்களை அளித்து வருகிறது என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here