முள்ளிவாய்க்கால் கொடூரத்தை பாடக்குறிப்பாக எழுதிய முல்லைத்தீவு மாணவன்

0

பாடசாலை மாணவன் ஒருவர் முள்ளிவாய்க்காலின் கொடிய நினைவுகளை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதியுள்ள நிகழ்வொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஆசிரியர் ஒருவர் தமிழ் பாடத்தில் இரட்டைக் கிழவி குறித்து தனது வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்துள்ளார். இதன்போது இரட்டைக் கிழவியை உபயோகப்படுத்தி வாக்கியங்களை அமைக்குமாறு அவர்களுக்கு பயிற்சி அளித்த வேளையில் மாணவர் ஒருவர் இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுகளை தன் குறிப்பில் எழுதியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன என்றும் இராணுவத்தினர் பெண்களை தறதற என்று இழுத்தனர் என்றும் எனது மனம் படபட என்று அடித்தது என்றும் அந்த மாணவர் தன் பாடக் குறிப்புப் புத்தகத்தில் எழுதியுள்ளார். தரம் ஒன்பதில் கல்வி கற்கும் இந்த மாணவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சிறு குழந்தையாக குழந்தையாக இருந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here