பேரழிவின் பெருந்துயரை நினைவுகூர்வோம்!

இன்றைக்கு 09 வருடங்களின் முன்னர், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்தை இன்று தமிழினம் நினைவுகூர்கிறது.

உலக வல்லரசுகள் எல்லாம் தொழில்நுட்ப உதவியுடன், அங்கு என்ன நடக்கிறதென்பதை தெளிவாக தெரிந்திருக்க- உலகத்தின் மனச்சாட்சி கண்களை மூடியிருக்க- ஒரு பெரும் யுகப்பிரளயம் நடந்து முடிந்த நாள் இன்றாகும்.

30 வருடங்களிற்கு மேலாக, தமிழர்களின் இனவிடுதலைக்காக ஆயுத வழியில் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இன்றையதினத்திலேயே முடிக்கப்பட்டது. இதற்காக வல்லரசு நாடுகளின் துணையுடன், சர்வதேச போர் நியமங்களை மீறி இலங்கையரசு நடத்திய போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயும், அங்கவீனமுற்றும், சொத்துக்களை இழந்தும் போயுள்ளனர்.

தமிழர்களின் அரசியல், சமூக வரலாற்றில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நாளில், தமிழின ஒருமைப்பாட்டையும், அரசியல் இலட்சியங்களையும் அடைய அனைவரும் மீளவும் உறுதிப்பாடு எடுத்துக்கொள்வோம்.

இன்றைய நாளில், போரில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உறவையும், அவர்களின் கனவையும் நெஞ்சில் இருத்துவோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here