10 வயது சிறுவனை கட்டி வைத்து தீவைப்பு- யாழில் அதிர்ச்சி சம்பவம்!

10 வயது சிறுவன் ஒருவர் இரண்டு கால்களிலும் எரி காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். வளர்ப்பு தந்தையே சிறுவனை கட்டி வைத்து காலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.  இந்த சம்பவம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறுவனது தந்தை இறந்து விட்டார். சிறிய தந்தையார் என்று கூறப்படும் ஒருவரே சிறுவனை பராமரித்து வருகிறார். அவரே தனது காலடி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி குற்றஞ்சாட்டப்படுகிறது. சிறுவன் பணம் எடுத்ததால் இவ்வாறு தீ மூட்டியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை வெளியில் யாரும் கூற வேண்டாம் என்று சிறுவனை மிரட்டியுள்ளார். தீ வைக்கப்பட்டு நான்கு நாட்கள் வரை மருத்துவமனையின் சேர்ப்பிக்கப்படவில்லை. வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தீக்காயங்கள் மோசமாகிய பின்னரே, ஊறணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்குள்ள பொலிசாரின் செயற்றிறன் போதாமையினால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொலிசார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பில் சிறுவர் தொடர்பான அதிகாரிக்கும், காங்கேசன்துறை பிரிவின் இரண்டாவது உதவி பொலிஸ் அத்தியட்சர்ருக்கும் முறையிட்டதையடுத்து,  பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். வல்வெட்டித்துறை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here