முன்னாள் போராளியை கடத்த முயற்சி; துப்பாக்கிச்சூடு: இரண்டாம் முறையாகவும் தப்பித்தார்!

மன்னார் உயிலம்குளம் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் வர்த்தகரான முன்னாள் போராளியொருவரை இலக்கு வைத்து இடம்பெற்ற கடத்தல்,துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் மயிரிழையில் தப்பித்துள்ளார். பொலிசார் என சந்தேகிக்கப்படுபவர்களே இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

உயிலங்குளத்தில் பகுதியில் யேசுதாசன் சுவாம்பிள்ளை என்ற வர்த்தகரின் வீட்டுக்கு நேற்ற சிவில் உடையில் வெள்ளைநிற வாகனமொன்றில் எட்டுப்பேர் சென்றுள்ளனர். யேசுதாசனின் வாகன சாரதியான தங்கத்துரை என்பவரை ஏற்கனவே கடத்தி, அவரை அந்த வாகனத்திற்குள் கைவிலங்கிட்டு வைத்திருந்துள்ளனர்.

தனது வீட்டின் அருகில் வாகனம் நிற்பனை யேசுதாசன் அவதானித்திருந்தார். பின்னர் மூன்றுபேர் அவரது வீட்டிற்குள் பதுங்கிப்பதுங்கி வந்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளனர். எனினும், கடத்தல்காரர்களை எதிர்த்து அவர் போரிட்டார். இதையடுத்து, அவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது நடந்த இழுபறியில் மூன்று தோட்டாக்கள் நிலத்திலும் விழுந்து விட்டன. இதையடுத்து, கடத்தல்காரர்கள் தமது முயற்சியை விட்டு, தப்பியோடினார்கள்.

ஆனால் அவர்கள் வந்த வாகனம் உடனடியாக இயங்கவில்லை. தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், அந்த குழுவினரின் வாகனத்தை இயங்க வைத்து, அவர்களை பத்திரமாக அனுப்பிவைத்தனர் என யேசுதாசன் குற்றம்சுமத்தியுள்ளார்.

அவர்கள் தப்பிச்செல்லும்போது, வாகனத்தில் கடத்தி வைத்திருந்த தங்கத்துரையையும் விடுவித்து சென்றனர். தங்கத்துரைக்கு அணிவித்த கைவிலங்கையம் தவறுதலாக போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

ஆயுததாரிகள் தப்பிச் செல்ல உதவிய போலீஸ் அதிகாரிகள் மூவரை எனக்கு நன்கு தெரியும், அவர்களை அடையாளம் காட்ட முடியும் என யேசுதாசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவத்தைக் கேள்விப்பட்ட நிர்மலநாதன் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமைகளை அவதானித்தார். துப்பாக்கி சூடு தொடர்பில் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருடன் அவர் பேசினார். உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் கூறினால் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய யேசுதாசன் மீது 2006ஆம் ஆண்டும் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு, அதிர்ஸ்டவசமாக தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here