சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட விஜயகலா: ஜனாதிபதி விசனம்!


இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டதாக, தனக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால விசனத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 7ம் திகதி நாடாளுமன்ற அமர்வின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு நிலவரங்கள் பற்றி ஆராயப்பட்டது. இதன்போது ஜனாதிபதியும் உரையாற்றியிருந்தார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்தபோது. விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட அலுவல் ஒன்று தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்துள்ளார். விஜயகலா கேட்ட விவகாரத்தில் மைத்திரி சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் மைத்திரி உரையாற்றியபோது, அரச தரப்பில் 3வது வரிசையில் அமர்ந்திருந்த விஜயகலா மகேஸ்வரன் இடையூறு ஏற்படுத்த சில முயற்சிகளை செய்தார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டாமென்ற நிலைப்பாட்டிற்கு தமிழ் தலைவர்கள் வந்ததை வரவேற்கிறேன் என ஜனாதிபதி உரையாற்றிய போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பக்கம் திரும்பி, ஜனாதிபதியின் உரைக்கு பதிலளிக்குமாறு சைகை காண்பித்துக் கொண்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்சவை புகழ்ந்து பேசியபோது, அருகிலிருந்து இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண மற்றும் ஐ.தே.கவின் சிலரை பார்த்து, கேள்வியெழுப்புமாறு சைகை காண்பித்துக் கொண்டிருந்தார்.

உரையாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி இதை அவதானித்துள்ளார்.

உரையாற்றிய பின்னர் நாடாளுமன்ற அறைக்குள் இருந்த ஜனாதிபதியை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட எம்.பிக்கள் சிலர் சந்தித்தனர். இதன்போதே, ஆளுந்தரப்பு வரிசையில் இருந்து “கீச்சிட்ட குரலில் குழப்பிய பெண் உறுப்பினர்“ பற்றி ஜனாதிபதி வசனம் தெரிவித்துள்ளார். அத்துடன், அது சிறுபிள்ளைத்தனமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here