யாழ் பல்கலைகழக துணைவேந்தர் ஏன் பதவிநீக்கப்பட்டார்?

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தராக பதவிவகித்த இ.விக்னேஸ்வரன் திடீரென பதவிநீக்கப்பட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைகழக வரலாற்றில் அரிதான சம்பவம் இது. ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, இந்த நீக்கத்தை செய்திருந்தார்.

விக்னேஸ்வரனை பதவிநீக்கிய அறிவிப்பிலும் காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.

போதாதற்கு, இந்த நீக்கம் நடந்த சமயத்தில்தான் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். பதவிநீக்கத்திற்கும், கைதிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா… அரசியல் விளையாடுகிறதா என பல விதமான ஊகங்கள் எழுப்பப்பட்டன.

இ.விக்னேஸ்வரனை துணைவேந்தராக்கியது தமிழ் அரசுக்கட்சி சிபாரிசு. கூட்டமைப்பின் ‘KEY MAN’ நேரடியாக சிபாரிசு செய்திருந்ததாக அப்பொழுதே சில செய்திகள் வெளியாகியிருந்தன.

பின்னர் “ஜனநாயகத்தை காக்க“ கூட்டமைப்பு களமிறங்க, மைத்திரி, கூட்டமைப்பு உறவு மோசமான நிலைமையில் இருக்கிறது. இது எதுவும் காரணமாக இருக்குமா என்றும் சிலர் கிளப்பி விட்டனர்.

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு கதையை அடித்து விட்டாலும், எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்த ஒரு விடயம்- இ.விக்னேஸ்வரனின் பதவிக்காலத்தில் பல்கலைக நிர்வாகத்தில் வீழ்ச்சியேற்பட்டிருந்தது. அவரிடம் நிர்வாக ஆளுமைத்திறன் போதுமானளவு இருக்கவில்லையென்ற கருத்தை ஓரளவு எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

இந்தநிலைமையில், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் மாற்றத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதி, உயர்கல்வி அமைச்சர் அது குறித்த விளக்கத்தை, தமிழ் அரசியல் தரப்பினரிடம் வழங்கியுள்ளனர்.

யாழ் பல்கலைகழக துணைவேந்தர் மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்பதை கூட்டமைப்பினர் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் அறிய முற்பட்டனர். அதற்கான விளக்கம் நேற்று கிடைத்துள்ளது.

பல்கலைகழக நிர்வாக வீழ்ச்சி பற்றிய பல புகார்கள் வடக்கு ஆளுனரிடம் சென்றதாகவும், ஆளுனர் அவற்றை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும்  கூறப்படுகிறது. இதையடுத்தே, பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.

உயர்கல்வி அமைச்சிலும் கூட்டமைப்பு தரப்பால் கேள்வியெழுப்பப்பட்டபோது, நேற்று இதேவிதமான விளக்கமே அளிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here