பொறுப்புக்கூற தவறும் இலங்கை: பிரி.எதிர்க்கட்சி தலைவர் சாடல்!

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு தொடர்ந்தும் தவறிவரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியாவின் பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோபின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரித்தானிய தொழிற் கட்சியின் தமிழர் அமைப்பு முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபின் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த நிகழ்வில் சிவோன் மெக்டோனால், எதிர்கட்சித் தலைவர் ஜெரமி கோபினுடன், மற்றும் நிழல் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தொழிற் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இன் நிகழ்வில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here