மனைவியின் வியாபாரத்திற்காக பெண் வேடமிட்ட முன்னணி நடிகர்

0

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயசூர்யா. இவர், தமிழிலும் என் மன வானில், வசூல் ராஜா எம்பிபிஎஸ், மனதோடு மழைக்காலம், சக்கிர வியூகம் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். எப்போதும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதையே குறிக்கோளாக வைத்து இருப்பவர்.

தற்போது, மூன்றாம் பாலின பெண்ணாக நடிக்கிறார். இப்படத்திற்கு நிஜன் மேரிகுட்டி என பெயரிடப்பட்டுள்ளது. திருநங்கைகள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை பின்னணியாக கொண்டு இப்படம் தயாராகவுள்ளது. இப்படத்தில் ஜெயசூர்யாவின் கதாபாத்திரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

இந்நிலையில், இதே கதாபாத்திரத்தில் சூர்யா செய்த இன்னொரு வேலையால் மீண்டும் ட்ரெண்ட் மோடுக்கு மாறி இருக்கிறார். ஜெயசூர்யாவின் மனைவி ஒரு காஷ்டியூம் டிசைனர். கணவரின் புன்யலன் அகர்பாதிஸ், புக்ரி, சு சுதி வால்மீகம் மற்றும் ப்ரதம் ஆகிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

தற்போது நிஜன் மேரிகுட்டி படத்தின் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இதுமட்டுமல்லாமல், இவர் ’சரிதா ஜெயசூர்யா டிசைனர் ஸ்டூடியோ’ என்ற பெயரில் பொட்டிக்கையும் நடத்தி வருகிறார். இந்த பொட்டிக்கின் விளம்பரத்திற்காக ஜெயசூர்யா திருநங்கை கெட்டப்பில் போஸ் கொடுத்து இருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here