கனடாவின் முக்கிய வீதியில் இனஅழிப்பு நினைவு பதாதை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 வது ஆண்டை முன்னிட்டு கனடாவில் நினைவேந்தல் பதாதை வைக்கப்பட்டள்ளது. டொரோண்டோ வீதியொன்றில் Genocide Against Tamils என எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்போரோ பகுதியில் உள்ள மார்க்கம் வீதியிலே இந்த பதாதை வைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு நீதி வேண்டு உலகத்தமிழனமே மே மாதத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி, போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இதன் ஒரு அங்கமாகவே கனடிய தமிழர்களால் இந்த நினைவேந்தல் பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வீதியால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்களும், பல்லின மக்களும் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here