வீட்டிலிருந்தபடியே மத்திய கிழக்கில் வேலை வேண்டுமா?

வேலை தேடுபவர்கள் பலர் வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் பல விளம்பரங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு வேலைக்கான விண்ணப்பத்தை அனுப்பி பதில் ஏதும் வராமல் இருப்பார்கள்.

பிறகு job fair போன்றவற்றுக்குச் செல்ல முயன்று உள்ளே கூட நுழைய முடியாமல் வெளியில் தள்ளப்பட்டிருப்பீர்கள். வேலை வாய்ப்புச் சந்தையில் பல பணிகள் வெறுமையாக உள்ளன. ஆனால் அதில் சேர தான் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வந்தாலும் வேலை தேடுபவர்களும் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து ஓய்ந்து இருப்பார்கள்.

புதிய வழிமுறைகள்

நம்பிக்கையை விட வேண்டாம். வேலையைத் தேட தேடு பொறிகள், சமுக வலைத்தளங்கள் மற்றும் ஜொப் பெயார்கள் தவிர்த்து இன்னும் சில வழிமுறைகள் உள்ளன.

பல நிறுவனங்கள் வளர்ந்து வரும் இணைய உலகில் இணையதளம் மூலமாகவே கலந்துரையாடி நேரடியாக தங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற ஊழியர்களைத் தேர்வு செய்கின்றனர்.

virtual career fair

உலகின் virtual career fairக்கு உங்களை வரவேற்கிறோம். இங்கு வேலை தேடுபவர்கள் தங்கள் நாடு மட்டும் இல்லாமல் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பணிகளை கூட அந்த நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து தெரிந்துகொண்டு வீட்டில் இருந்தபடியே எட்டிப்பிடிக்கலாம். ஆம், விண்ணப்பதாரர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வேலைக்கான நேர்முகத்தேர்வை முடிக்கலாம்.

ஒன்லைன் கரியர் நிகழ்வுகள்

ஒன்லைன் கரியர் நிகழ்வுகள் பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஜொப் பெயார்கள் போன்றதே. வெற்றிடங்கள் உள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து தனக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பித்து நேரடியாக நிறுவன ஊழியர்களை இணையம் மூலமாகவே சந்திக்கலாம்.

எளிதாக நிறுவனம் ஊழியர்களுடன் கலந்துரையாடலாம்

இப்படி விரிச்சுவல் ஜொப் பெயார்களின் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது எளிதாக நிறுவனம் ஊழியர்களுடன் உரை தகவல், ஓடியோ மற்றும் வீடியோ அரட்டை அல்லது இரண்டும் ஒரே நேரத்தில் செய்யலாம் என்று கூறுகிறார் விபெயார்ஸ்.கொம்(vFairs.com) நிறுவனத்தில் பொது நிர்வாகி முகமது யூனஸ்.

ஜொப் பெயார்கள்

ஒவ்வொரு வருடமும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ளவர்களுக்காகப் பல ஒன்லைன் ஜொப் பெயார்களை நடத்தி வருகின்றது பேயட்.கொம்(Bayt.com). அதில் குறைந்தது 3 ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 6 ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆதரவு

ஒவ்வொரு காலாண்டிலும் இது போன்று விர்ச்சுவல் ஜொப் பெயார்களில் இணையதளம் மூலம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை மிகவும் பிரபலமாகி வருவதாக ஒரு இணையதள வேலைவாய்ப்பு இணையதளத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வேலை தேடுபவர்களின் திருப்தி

வேலை தேடுபவர்களின் திருப்தி அளவுகளும் அதிகமாகவே உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் இருந்து இந்த இணையதள ஜொப் பெயார்களில் பங்கேற்கும் 10-ல் 6 பேர் மிகவும் திருப்தியாக உள்ளதாகக் கருத்து தெரிவிக்கின்றனர். விர்ச்சுவல் ஜொப் பெயார்கள் மூலம் வேலைக்குச் சேருவதும், வேலைக்கு ஆட்களை எடுப்பதும் மிகவும் எளிதாக உள்ளது என்று பேய்ட்.கொம் தரப்பு கூறுகின்றது.

தனி சிறப்பு

இந்த நிகழ்வுகளின் தனிச் சிறப்பு என்னவென்றால் இந்த நாட்டவர் மட்டும் தான் என்று இல்லாமல் எல்லோரும் பங்கேற்று நேர்முகத் தேர்வின் மூலம் வேலைப் பெறலாம்.

மேலும் இந்த ஒன்லைன் ஜொப் பெயார்கள் பல தரப்பு நிறுவனங்கள் அதாவது சிறு மற்றும் குறு நிறுவனங்களில் இருந்து பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது இன்னொரு சிறப்பு.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here