அட்சய திருதியை சுப நேரங்கள்!

சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சய திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.

இந்த வருடம் அட்சய திரிதியை நாளை வருகிறது.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.

அட்சய திரிதியை அன்று தானம் செய்தால், மற்ற நாட்களில் தானம் செய்வதைவிட பலமடங்கு புண்ணியத்தை தரும்.

அன்று சுபகாரியங்கள் செய்ய நல்ல நேரங்கள்-

காலை 07:30 முதல் 09:00

காலை 10:30 முதல் 12:00

மதியம் 01:30 முதல் 03:00

மாலை 04:30 முதல் 06:00

இரவு 07:30 முதல் 09:00

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here