தோட்டமென்றதும் வேலைக்கு ஆட்கள் எடுக்கலாமென்பதை மாற்றுங்கள்

தோட்டம் என்றதும் வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை ஆசிரியர்கள் தான் மாற்ற வேண்டும் என்று கூறுகின்றார்  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தழிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு 92 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கொழும்பு அப்பேகம வளாகத்தில் நடைபெற்றது. (17.15.2018) இங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்
இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தான உட்பட மேலதிக செயலாயர்கள் பனிப்பாளர்கள் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க கல்வி அமைச்சர்
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்கள் 3021 பேரை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தில் 7 வதும் இறுதியுமான நியமனம் வழங்கும் சுற்று இன்று நடைபெருகின்றது. இந்த நிமயனம் பெரும் ஆசிரிய உதவியாளர்கள் தங்களது கல்வி சேவையை மலையக மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு அர்ப்பணிப்பு கொண்டதாக இருக்க வேண்டும். இன்று மலையகம் என்றாலே வேலைக்கு ஆட்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை தோன்றி உள்ளது இதனை மாற்றி அமைக்க வேண்டுமானால் மலையத்தில் கல்வி நிலை அதிகரிக்க வேண்டும்.
இதற்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அதனை உணர்ந்து நீங்கள் சேவை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் என்பவர்கள் ஏணிகாக இருந்துக் கொண்டு பலரை ஏற்றி விடுபவர்களானவும் தோணியாக இருந்தக் கொண்டு கரை சேர்பவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். ஆனால் அவர்கள் உயர்பவர்களாகவும் கரை சேர்பவர்களாவும் இருப்பதில்லை. ஆனால் பூரண திருப்தி அவர்களுக்கு தான் இருக்கின்றது. வேறு எந்ந தொழிலிலும் பூரண திருப்தி என்ற ஒன்று இல்லை. தொழிலுக்காக தொழிலாளர்களை உறுவாக்கும் தொழில் ஆசிரியர் தொழிலுக்கே உள்ளது.  இந்த ஆசிரியர்களே வைத்தியர்களையும் சட்டதரணிகளையும் பொருளியலாளர்களையும் ஏன் அனைத்து தொழிலுக்குமான தொழிலாளர்களையும் உறுவாக்குகின்றனர். அதனால் நீங்கள் உங்களையும் வளர்த்துக் கொண்டு சமூகத்தையம் வளர்க்க வேண்டும்.
ஆசிரியர்களாக உருவாக நியமனம் பெற்ற நீங்கள் சமூக அக்கரையுடன் செயற்பட வேண்டும். இதை உங்களுக்கு பெற்றுக் கொடுக்க நான் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானேன் அதற்காக விமர்சிக்கவும் பட்டேன் பரவாயில்லை உங்களுக்காக ஏற்றுக் கொள்கின்றேன். ஏதோ இந்த வேலையை எப்படியாவது.  முடித்து உங்களுக்கு நியமனத்தை பெற்று கொடுத்து விட்டேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.
தற்போது பெருந்தோட்டதுறை கல்வி அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது. அதற்கு அன்மையில் வந்த கல்வி பொது சாதாரணதர பெறுபேறுகள் ஆதாரமாக இருக்கின்றது. இதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் மலையத்தில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னேடுத்துச் செல்கின்றேன். அதில் 2016 தொடக்கம் 2018 காலப்பகுதியில் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பிரிவின் மூலம் 950 மில்லியன் ரூபா செலவில் அவிருத்திகள் மேற்க் கொள்ளபட்டு வருகின்றன. 23 கணித விஞ்ஞான பாடசாலையும் ஒரு நுன்கலை பாடசாலையும் ஒரு விளையாட்டு பாடசாலையும் 450 மில்லியன் ரூபா செலவில் அவிருத்தி செய்யபட்டு வருகின்றது. கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்திற்கு மலையத்தில் உள்ள தோட்ட  பாடசாலைகள் 843 இல் 770 பாடசாலைகள் உள்வாங்கபட்டு 3000 மில்லியன் ரூபா செலவில் அவிவிருத்தி செய்யபட்டு வருகின்றன. இது கல்வி அமைச்சின் வரலாற்றில்  முதற் தடவையாக மலைய பாடசாலைகளின் அவிருத்திக்கு ஒதுக்கபட்ட பெரும் தொகையான பணமாகும். அது மட்டுமல்லாது இந்திய உதவியுடன் 31 பாடசாலைகள் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யபட உள்ளன.
மலையத்தின் தேசிய கல்வியற் கல்லூரிகள் ஆசிரியகலாசாலைகள் அபிவிருத்தி செய்யபட்டுள்ளன. அத்துடன் மலையத்திற்கு ஆசிரியர் நிமனங்கள் அதிபர் நியமனங்கள் அதிகாரிகளின் நியமனங்கள் உட்பட கல்விசாரா ஊழியர்களின் நியமனங்களும் வழங்கபட்டுள்ளன. எதிர்காலத்தில் மலையகத்தின் அதிபர்கள் ஆசிரியர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு அவர்களின் சேவை பெறுபேறுகளுக்கு அமைய வெளிநாட்டு சுற்று பயணங்களை மேற்க் கொள்ள நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டுள்ளன. மலையக மாணவர்களின் கணித விஞ்ஞான ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய புதிய திட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளன அதில் கணிதபாட அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் வாரங்களில் ஆரபிக்கப்படும் என்று கூறினார்.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here