யார் இந்த புலஸ்தினி?… எப்படி தற்கொலையாளிகளுடன் சேர்ந்தார்?

இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பின்னர் பொலீசாரால் தேடப்பட்டுவரும் தீவிரவாத பட்டியலில் உள்ள சாரா என்ற புலஸ்தினி மகேந்திரன் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை எமது ஊடகம் சேகரித்துள்ளது.
பொலிசார் அவரது தகப்பனின் பெயரை தவறாக ராஜேந்திரன் என குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தேத்தாதீவைச் சேர்ந்த மகேந்திரன் கவிதா தம்பதியினருக்கு பிறந்தவர் புலஸ்தினி.

தேத்தாதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற மகேந்திரன் புலஸ்தினி கா.பொ.த. சாதாரண தரத்தில் 8A, 1B பெற்று பாடசாலையில் முதல் தர மாணவியாக சித்தியடைந்து உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.

அவர் தனியார் வகுப்பிற்கு கல்முனைக்கு சென்று படித்துள்ளார். குறித்த தனியார் வகுப்பிற்கு ஓட்டமாவடியில் இருந்து வந்த A. M. M. ஹஸ்தும் (இவர் நீர்கொழும்பு சென்.செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாரியாக வெடித்தவர்) என்ற முஸ்லிம் இளைஞருடன் காதல் ஏற்பட்டது.

புலஸ்தினியின் கணவனான மனித வெடிகுண்டு

2015 ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு ஒரு மாதத்தின் முன், புலஸ்தினியை வேன் ஒன்றில் கடத்தி கொழும்பிற்கு கொண்டு சென்று விட்டனர் என அவரது தாயார் மகேந்திரன் கவிதா எங்களிடம் தெரிவித்தார்.

திருமணம் செய்து வைத்த இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் அப்துல் ராசிக்?

கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் மற்றும் ஓட்டமாவடி இற்கும் இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் அப்துல் ராசிக் என்பவர் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்தவருடம் மார்ச் மாதம் இறுதியாக புலஸ்தினி தம்முடன் பேசியதாக, தாயார் குறிப்பிட்டார். தனது தொலைபேசி பழுதடைந்துள்ளதால் திருத்தக் கொடுக்க போவதாகவும், இப்போதைக்கு தொடர்புகொள்ள மாட்டேன் என்று தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

இதேவேளை, ஏப்ரல் 7ம் திகதி புலஸ்தினியை தேடி ஒருவர் தமது வீட்டுக்கு வந்ததாகவும், இராணுவ புலனாய்வாளர் என தன்னை குறிப்பிட்டதாகவும், ஆனால் அவர் சஹ்ரான் குழுவை சேர்ந்தவர் என்றே தான் ஊகிப்பதாகவும் தாயார் தெரிவித்தார்.

சில காலத்தின் முன் லவ் ஜிஹாத் என்ற செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. காதல் வலையில் விழும் தமிழ் பெண்களை மதம் மாற்றுவதே இதன் நோக்கம். அப்படியான செயற்பாட்டில் மதம் மாறி, ஸாரா என்ற பெயரை சூட்டிக் கொண்டார் புலஸ்தினி.

தாக்குதலிற்காக நீண்டகால திட்டமிடலில் தவ்ஹீத் ஜமா அத் செயற்பட்டு, இப்படி மதம் மாற்றி எடுத்ததா, அல்லது அவர் தற்கொலையாளிகளின் பிடியில் சென்றது எதேச்சையானதா என தெரியவில்லை. ஆனால், “பித்து பிடிப்பவர்கள் போல“ தமிழ் பெண்கள் சிலர் மதம் மாறற்ப்பட்டு, இரண்டாவது கேள்வி கேட்காமல், எதையும் செய்ய தயாராக மாற்றப்படுகிறார்கள் என்பதற்கு மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் மதம் மாற்றப்பட்ட சம்பவம் உதாரணம்.

சுய விழிப்புத்தான் சமூகத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here