ஆளை விழுங்கும் மலைப்பாம்புகளுடன் சிறுமிகள் விபரீதம்!

இந்தோனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் ஆற்றல் கொண்ட மலைப்பாம்புடன் இரு சிறுமிகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாகியுள்ளது.

மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை, இந்தக் காணொளியைக் கண்ட அனைவரும் கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.

அந்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். உலகின் மிகவும் நீளமான, மிகவும் எடை கூடிய அந்த மலைப்பாம்புடன் அந்த இரு சிறுமிகள் கொஞ்சி விளையாடுகின்றனர்.

விஷத்தன்மையற்ற அந்த மலைப்பாம்பானது மனிதர்களை முழுவதும் விழுங்கும் திறன் படைத்ததாகும். அந்த ஒரு நிமிட வீடியோவில் அந்த மலைப்பாம்பின் மீது ஏறி சிறுமி ஒருவர் விளையாடுகிறார்.

இன்னொரு சிறுமி அதன் மீது அமர்ந்தவாறே கமராவுக்கு போஸ் கொடுக்கிறார். இந்தக் காட்சிகளை கண்ட மக்கள், அந்தச் சிறுமிகளின் பெற்றோரை கடுமையாக சாடியுள்ளனர்.

இன்று அல்லது நாளை, நிச்சயம் ஒரு நாள் அந்த மலைப்பாம்பு சிறுமிகளை பிடித்து விழுங்கி விடும் ஆபத்து உண்டு. இதற்கு காரணமான பெற்றோரை இப்போதே தண்டிக்கவேண்டும் என பலர் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here