அஜித் படத்தால் பாதிக்கப்படும் திரையுலகம்: புதிய பரபரப்பு!

வெளிமாநிலத்தில் போடப்பட்டு இருக்கும் விஸ்வாசம் செட்டால் கோலிவுட்டின் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து இருப்பதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித், ரோபோ ஷங்கர் உள்பட சில பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில், வெளிமாநிலத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளதற்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவிலேயே பெரிய படப்பிடிப்பு தளம் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் கட்டப்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத்தளம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கின் திறப்பு விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிரமாண்டமான அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதன் மூலம், ஆயிரத்துக்கும் அதிகமான பெப்சி ஊழியர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால், பெரிய நட்சத்திரங்கள் சிலர் படப்பிடிப்பை ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இல்லாத வசதிகளா வெளியில் கிடைக்க போகிறது. அப்படப்பிடிப்பால் இங்கு பலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு தட்டிப்போய் இருக்கிறது. ’விஸ்வாசம்’ போன்ற பெரிய ஸ்டார் படங்களின் படப்பிடிப்பை வெளியூர்களில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சென்னையிலேயே அந்த தளத்தை அமைத்து படப்பிடிப்புகளை நடத்தினால் அவர்களுக்கும் ஆகும் செலவும் குறையும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here