இந்தவார ராசிபலன்கள் (5.5.2019- 12.5.2019)

செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு அனுகூலமாக உள்ளனர். நிதர்சனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்களை அவமதித்தவர் அன்பு பாராட்டும் சூழல் உருவாகும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகள் பெற்றோர் சொல்லை தயக்கமுடன் ஏற்றுக் கொள்வர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி இணக்கமுடன் நடந்து கொள்வார். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்களுக்கு கல்வியில் இதுவரை இருந்த சந்தேகம் தெளிவடையும்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலன் வழங்குவர். பேச்சில் உண்மை, நேர்மை நிறைந்திருக்கும். உறவினரின் வாழ்த்து கிடைக்கும். அறிமுகமற்றவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள் தாங்கள் விரும்பும் பொருளை வாங்க பிடிவாதம் கொள்வர். இஷ்டதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும். மனைவியின் அன்பு மனதை நெகிழ வைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலையை ஏற்கும் சூழல் ஏற்படும். பெண்கள் குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம். மாணவர்கள் நண்பர்களிடம் நிதானித்து பழகவும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சூரியன், புதன், குரு, சந்திரன் அனுகூலமாக உள்ளனர். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிள்ளைகள் தாங்கள் விரும்பிய பொருளை கேட்டுப்பெறுவர். .உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் ஆலோசனை மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் தங்கள் துறை ரீதியிலான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வர். வெளியூர் பயணம் இனிய அனுபவத்தை தரும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்களின் ஞாபகத்திறன் சிறப்பாக வெளிப்பட்டு படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 28.4.19 காலை 6:00 மணி – பகல் 5:06 மணி
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு வெற்றி தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் ராஜயோக பலன் கிடைக்கும். நடைமுறை வாழ்வில் இருந்த சிரமம் குறையும். உங்களை அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். வெளியூர் பயணம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். பிள்ளைகளின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திடும். பணக்கடனை திருப்பி செலுத்துவீர்கள். மனைவியின் அன்பினாலும், உறவினர்களின் வருகையாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பரிசு, பாராட்டு பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 28.04.19 மாலை 5:07 மணி – 30.04.19 இரவு 4:45 மணி
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

குரு, சுக்கிரன், ராகு, செவ்வாய் ராஜயோக பலன் தருவர். மனதில் தெளிவான சிந்தனை பிறக்கும். முக்கிய தருணத்தில் நண்பரின் உதவி கிடைக்கும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு செயல்திறன் மேம்படும். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து அன்பு பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பாராட்டு, பரிசு பெறுவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நிம்மதி தரும்.

சந்திரன், புதன் ஓரளவு நற்பலன்களை வழங்குவர். தாமதமான பணிகளை நிறைவேற்ற புதிய வாய்ப்பு ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வாகனத்தில் பராமரிப்பு பணி செய்வதால் பயணம் எளிதாகும். பிள்ளைகளின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவியிடம் உங்கள் உறவினர் குடும்ப விவகாரம் பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது நல்லது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றுவது அவசியம். பெண்கள் வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிப்பர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 3.5.19 பகல் 3:09 மணி 4.5.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு செல்வம் தரும்.

சந்திரன், கேது, சனீஸ்வரர் அனுகூலபலன் வழங்குவர், தாமதமான பணியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் இடம், சூழல் உணர்ந்து பேசுவீர்கள். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் பாசம் மிகுந்த பேச்சில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சி சீராகும். பணியாளர்கள் பணித்திறமையை வளர்த்துக் கொள்வர். பெண்கள் உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 5.5.19 இரவு 11:12 மணி 8.5.19 அதிகாலை 4:50 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சூரியன், புதன், குரு. சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். வாழ்வில் முன்னேற கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. வீட்டில் ஒற்றுமை நிலைத்திருக்கும். பிள்ளைகள் பெற்றோரிடம் நண்பரைப் போன்று பழகுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமையை சேர்த்திடும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம்: 8.5.19 அதிகாலை 4:51 மணி 10.5.19 காலை 8:37 மணி
பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு நற்பலன் தரும்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். செயல்களை புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பாசம் மனதில் ஊக்கம் தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் கல்வித் திறனில் மேம்பட உதவுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப தேவைகள் சிக்கன பணச்செலவில் பூர்த்தியாகும். மனைவியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமயோசிதமாக எதிர்கொள்வீர்கள். பணியாளர்கள் நேர்த்தியுடன் பணிபுரிவர். விண்ணப்பித்த நிதியுதவி கிடைக்கும். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சந்திராஷ்டமம்: 10.5.19 காலை 8:38 மணி முதல் 11.5.19 நாள் முழுவதும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு அளப்பரிய நற்பலன் வழங்குவர். சமயோசிதமாக செயல்படுவீர்கள். பணிகளில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் நல்ல பலன் தரும். சமூக நிகழ்வு இனியதாக அமைந்திடும். புதிய வாகனம் விரும்பியபடி வாங்கலாம் .பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க தேவையானதை செய்வீர்கள். சத்தான உணவும், சீரான ஓய்வும் பின்பற்றி உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவீர்கள். மனைவியின் அன்பு நிறைந்த சொல்லும், செயலும் குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் புத்தாடை, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியை தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். உங்களை குறை சொன்னவரும் பாராட்டுகின்ற இனிய சூழல் உருவாகும். திட்டமிட்ட செயல் திருப்திகரமாக நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் நன்மைகளை பெற்றுத்தரும். பிள்ளைகளின் மகிழ்ச்சிகர செயல்பாடு நிறைவேற உதவுவீர்கள். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் அன்பு பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சியும், தாராள பணவரவும் கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலன் பேணிக்காத்திடுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம்: நாராயணன் வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன், சந்திரன் ஓரளவு நற்பலன் தருவர். வசீகரமாக பேசுவீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய திட்டம் உருவாகும். வாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் செயலில் ஈடுபடுவர். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவி உங்கள் கருத்துடன் இணக்கமாக நடந்து கொள்வார். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புதிய வாடிக்கையாளர்களால் தொழில், வியாபாரம் சீராகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக்கூடாது

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here