பாலாவி கொலை- 6 பேருக்கு விளக்கமறியல்

கொடிகாமம் பாலாவி பகுதியில் முதியவர் ஒருவரை ஈட்டியால் குத்திக் கொன்று, மேலும் 7 பேருக்கு காயம் சிளைவித்த குற்றச்சாட்டில் கைதான 6 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கெற்பலி, பாலாவி கிராமங்களிற்கிடையிலான மோதல் கடந்த ஒரு மாதமாக நீடிக்கிறது. இடையிடையே மோதலும் நடப்பதுண்டு.

இந்தநிலையில் கடந்த செல்வாக்கிழமை, 30 பேர் கொண்ட ரௌடிக்கும்பல் பாலாவி கிராமத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இதில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். இநது தொடர்பாக பொலிசார் நடத்தய விசாரணையில் ஆறுபேர் கைதாகினர். அவ்கள் கொடிகாமம் பகுதியை சேர்ந்தவர்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here