தெல்லிப்பழை மகாஜனா இறுதிக்குத் தகுதி பெற்றது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­ட­மொன்­றில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மானிப்­பாய் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் 10 ஆவது நிமி­டத்­தில் மகா­ஜ­னா­வின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் கனு­ஜன்.

அந்­தக் கோலே முதல் பாதி­யில் பதி­வான ஒரே ­கோ­லாக அமைந்­தது. முதல் பாதி­யின் முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் ஆதிக்­கம் செலுத்­தி­யது தெல்­லிப்­பழை மகா­ஜன.

இரண்­டாம் பாதி­யின் 15 ஆவது நிமி­டத்­தில் மகா­ஜ­னவின் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்­தார் ஜக்­சன்.

முடி­வில் 2:0 என்ற கோல் கணக்கில் வெற்­றி­பெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here