பண்டத்தரிப்பை வீழ்த்தி சம்பியனானது மகாஜன கல்லூரி

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில், 20 வயது பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி சம்­பி­ய­னா­னது.

கன­க­ரெத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து பண்­டத்­த­ரிப்பு மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி மோதி­யது.

இரண்டு அணி­க­ளும் ஆரம்­பம் முதல் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டாம் பாதி­யின் 10ஆவது நிமி­டத்­தில் கிடைத்த தண்­டனை உதை­யைப் பயன்­ப­டுத்தி மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் வீராங்­கனை தர்­மிகா முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார்.

15 ஆவது நிமி­டத்­தில் சானு மகா­ஜ­னா­வின் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்ய, முடி­வில் 2:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி. சிறந்த வீராங்­க­னை­யாக தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி­யின் கௌரி தெரி­வா­னர்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here