முன்னாள் போராளிகள் சிலரைப் போலவே சஹ்ரான் குழுவும்: சுமந்திரன்!

முன்னாள் போராளிகள் சிலர் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து வேலை செய்திருக்கிறார்கள். அவர்களை போலத்தான் தேசிய தௌஹீத் ஜமீத் அமைப்பும். இராணுவ புலனாய்வாளர்களுடன் சேர்ந்து யார் வேலை செய்தார்கள் என்பது எங்களுக்கு இன்னும் சரியாக தெரியாது. ஆனால் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டவையா இந்த சம்பவங்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்.

என்னை கொல்ல வதி திட்டம் தீட்டியதாக கூறி ஐவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அந்த விவகாரத்தில் இராணுவ புலனாய்வு பிரிவிலே ஒரு சந்தேகம் இருந்தது. நான் முன்னர் சொன்னதை போல, இராணுவ புலனாய்விலுள்ள ஒரு பகுதியினர், தமிழீழ விடுதலைப்புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் எ்ற பதற்றத்தை நாட்டிலே உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதை வெறும் வதந்தியாக அவர்கள் பரப்பவில்லை. அந்த வதந்தியை மக்கள் நம்பச் செய்வதற்காக கொலைகளை கூட செய்ய தயாராக இரந்திருக்கிறார்கள் என்பது வவுணதீவு சம்பவத்தின் மூலம் தெரிகிறது. என்னை கொல்ல தீட்டப்பட்ட சதித்திட்டம் கூட அப்படியானதாக இருந்திருக்கலாம். ஏனெனில் உயிர் அவர்களிற்கு முக்கியமல்ல. விடுதலைப்புலிகள் மீள்எழுச்சி பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை மக்கள் நம்ப வேண்டுமென்பதுதான் அவர்களிற்கு முக்கியமாக உள்ளது. அதற்கு அவர்கள் பலரை உபயோகிக்கிறார்கள்.

முன்னாள் போராளிகளாக இருந்தாலும் கூட, அவர்களில் சிலர் புலனாய்வோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் என்பது எங்களில் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அதே போலத்தான் தேசிய தௌஹீத் ஜமீத் அமைப்பும். அவர்களும் இவர்களோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். ஆகவே, யார் இந்த தரப்போடு சேர்ந்து வேலை செய்தார்கள் என்பது எங்களுக்கு இன்னமும் தெரியாது.  இப்படியான தாக்குதல்கள் தயாரிக்கப்பட்டு, நடத்தப்பட்டு, சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக இரண்டு பொலிசார் உயிரிழந்துள்ளனர். 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளார்கள். இவையெல்லாம் இப்படியான ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்தப்பட்டதா என்ற பாரிய சந்தேகம் உள்ளது என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here