மன்னாரில் மீண்டும் எலும்புக்கூடு

0

மன்னார் லங்கா சதோச நிறுவன வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த லங்கா சதோச கட்டடம் உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் காணியில் அகழப்படும் மண் விற்பனை செய்யப்படுகின்றது. அங்கு கொள்வனவு செய்யப்பட்டு மன்னார், எமில் நகரில் வீடொன்றில் கொண்டப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன என்று வீட்டு உரிமையாளரால் கடந்த 26ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்றுமுன்தினம் மாலை நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, சிறப்புச் சட்ட வைத்திய நிபுணர், சிறப்புத் தடயவியல் நிபுணத்துவப் பொலிஸார் ஆகியோர் சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டனர். முதல் கட்ட அகழ்வுப் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன. பல மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் அங்கு நீர் அதிகம் காணப்பட்டதால் அதை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. நாளை வியாழக்கிழமையும் அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here