முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: போக்குவரத்து ஒழுங்குகள் வெளியிடப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் அறிவித்தல் விடுத்திருக்கிறார்.

இதன்படி யாழ்ப்பாண பேரூந்து ஒழுங்குகள்-

அனைத்து பேரூந்துகளும் காலை 7.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் புறப்படும்.

1.காரைநகரில் இருந்து ஒரு பேரூந்து சுழிபுரம் ஊடாக சங்கானை, சண்டிலிப்பாய், மானிப்பாய் வழியே முள்ளிவாய்க்கால் செல்லும்.

2.கட்டைக்காட்டில் இருந்து (வடமராட்சி கிழக்கு) மருதங்கேணி ஊடாக ஒரு பேரூந்து முள்ளிவாய்க்கால் செல்லும்.

3.அச்சுவேலி பேரூந்து நிலையத்தில் இருந்து ஒரு பேரூந்து பறப்பட்டு கோப்பாய், கைதடி வழியே முள்ளிவாய்க்கால் சென்றடையும்.

4.தொண்டமானாற்று சந்தியில் இருந்து ஒரு பேரூந்து புறப்பட்டு, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஊடாக புதுக்காடு சென்று முள்ளிவாய்க்கால் சென்றடையும்.

5.யாழ் பல்கலைகழகத்தில் இருந்து 2 பேரூந்துகள் முள்ளிவாய்க்கால் செல்லும்.

வவுனியா மாவட்ட பேரூந்து ஒழுங்குகள்

1.செட்டிக்குளம் பிரதேசசபை முன்னால் இருந்து காலை 8.30 மணிக்கு ஒரு பேரூந்து முள்ளிவாய்க்கால் புறப்படும்.

2.வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து மூன்று பேரூந்துகள் காலை 8.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் புறப்படும்.

மன்னார் மாவட்ட பேரூந்து ஒழுங்குகள்

1.அடம்பனில் இருந்து காலை ஏழு மணிக்கு முள்ளிவாய்க்கால் நோக்கி பேரூந்து ஒன்று புறப்படும்.

2.தலைமன்னாரில் இருந்து பேரூந்து ஒன்று காலை ஏழு மணிக்கு புறப்பட்டு பேசாலை, தாழ்வுப்பாடு ஊடாக முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்படும்.

3.கீரியில் இருந்து காலை ஏழு மணிக்கு புறப்படும் பேரூந்து ஒன்று எழுத்தூர் மன்னார் வழியாக முள்ளிவாய்க்கால் செல்லும்.

4.நானாட்டான் சந்தியில் இருந்து காலை ஏழு மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்காலிற்கு புறப்படும்.

5.மடுவில் இருந்து காலை ஏழு மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்படும்.

 

கிளிநொச்சி மாவட்ட பேரூந்து ஒழுங்குகள்

1.கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரண்டு பேரூந்துகள் ஒன்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்படும்.

2.கந்தசாமி கோயிலடியில் இருந்து ஒன்பது மணிக்கு ஒரு பேரூந்து முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்படும்.

3.பரந்தன் சந்தியில் இருந்து காலை ஒன்பது மணிக்கு ஒரு பேரூந்து புறப்படும்.

 

முல்லைத்தீவு மாவட்ட பேரூந்து ஒழுங்குகள்

1.தேவிபுரம் சந்தியில் இருந்து காலை ஒன்பது மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் புறப்படும்.

2.உடையார்கட்டு சந்தியில் இருந்து காலை ஒன்பது மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் புறப்படும்.

3.புதுக்குடியிருப்பு சந்தியில் இரந்து காலை ஒன்பது மணிக்கு பேரூந்துகள் இரண்டு முள்ளிவாய்க்கால் புறப்படும்.

4.விசுவமடு சந்தியில் இருந்து காலை ஒன்பது மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் புறப்படும்.

5.துணுக்காய் பேரூந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் புறப்படும்.

6.ஒட்டுசுட்டான் சந்தியில் இருந்து காலை ஒன்பது மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் புறப்படும்.

7.கொக்கிளாயில் இரந்து காலை ஒன்பது மணிக்கு பேரூந்து ஒன்று முள்ளிவாய்க்கால் புறப்படும்.

8.முல்லைத்தீவு நகரில் இருந்து காலை ஒன்பது மணி தொடக்கம் இரண்டு பேரூந்துகள் முள்ளிவாய்க்கால் நோக்கி தொடர்ந்து சேவையில் ஈடுபடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here