சட்டத்தை கையிலெடுத்த போதகர்: வேடிக்கை பார்த்த பொலிசார்!

வலி கிழக்­குப் பிர­தேச சபை­யின் முத­லா­வது தீர்­மா­ன­மாக ‘‘ போத­க­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள அச்­சு­வேலி நெசவு நிலை­யத்தை மீண்­டும் இளை­யோர்­க­ளின் தொழில் முயற்­சிக்­கான நிலை­ய­மா­கச் செயற்­பட வைத்­தல் மற்றும் பிர­தேச சபை­யின் அனு­மதி பெறாத நிலை­யில் நெசவு நிலைய வளா­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கட்­டு­மா­னங்­கள் மற்­றும் செயற்­பா­டு­கள் தொடர்­பாக பிர­தேச சபை உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும்’’ என்ற தீர்­மா­னம் கடந்த 4ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற வலி கிழக்கு பிர­தேச சபைக் கூட்­டத்­தில் ஒரு­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இந்நிலையில் மேற்­படி தீர்­ம­னத்­தின் அடிப்­ப­டை­யில் நேற்­றுச் செவ்­வாய்க்­கி­ழமை வலி­கி­ழக்­குப் பிர­தேச சபை­யின் உப­த­வி­சா­ளர் ம.கபி­லன், செய­லா­ளர், யு.ஜெலீ­பன், அச்­சு­வேலி உப அலு­வ­ல­கப் பொறுப்­ப­தி­காரி, இரண்டு தொழில்­நுட்ப அலு­வ­லர்­கள் என ஐந்து பேரும் நெசவு நிலை­யத்தை நேரில் பார்­வை­யி­டு­வ­தற்­குச் சென்­றி­ருந்­த­னர்.

உரிய முன்­ன­றி­வித்­தல் செய்­து­விட்­டுச் சென்­ற­மை­யால் அதி­கா­ரி­க­ளின் வரு­கையை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த போத­கர் அவர்­க­ளை­உள்ளே செல்­ல­வி­டா­மல் தடுத்து நிறுத்­தித் திருப்பி அனுப்­பி­னார் எனக் கூறப்­பட்­டது. உள்­ளூ­ராட்­சிச் சட்ட விதி­க­ளின் பிர­கா­ரம் உரிய அறி­வித்­தல் செய்த பின்­னர் அச்­சு­வேலி நெசவு நிலைய வளா­கத்­தைப் பார்­வை­யி­டு­வ­தற்­குச் சென்­றோம்.

எமது கட­மையை மேற்­கொள்­ள­வி­டா­மல் நெசவு நிலைய வளா­கத்­துக்கு உள்ளே செல்­ல­வி­டா­மல் தடுத்து நிறுத்­தப்­பட்­டோம். இது தொடர்­பாக அச்­சு­வே­லிப் பொலிஸ் நிலை­யத்­தில் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வந்த போது போத­க­ரும் அங்கு சமு­க­ம­ளித்­தார்.

பொலி­ஸார் போத­க­ருக்கு சாத­க­மா­கவே நடந்­து­கொண்­ட­னர். மேற்­படி விட­யம் தொடர்­பாக உள்­ளூ­ராட்­சித் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­து­டன், உள்­ளூ­ராட்­சிச் சட்ட விதி­க­ளின் படி­யும், கடமை செய்­ய­வி­டா­மல் தடுத்­தது தொடர்­பா­க­வும் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ளோம் என தெரிவித்தார்.

Loading...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here