குழந்தைகளை வகுப்பறைக்குள் வைத்து பூட்டிய ஈ.பி.டி.பி உறுப்பினர்: முன்பள்ளியே இழுத்து மூடப்பட்டது!

0

யாழ்ப்பாணம், இருபாலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் சனசமூக நிலையம் ஒன்றில் இயங்கிய வந்த முன்பள்ளி ஒன்று கல்வித் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளது.

முன்பள்ளி மாணவர்கள் கற்றுக் கொண்டிருந்தபோது முன்பள்ளிக் கட்டடத்தை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு ஆசிரியை சென்றதையடுத்தே கல்வித்திணைக்களம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது..

முன்பள்ளி மாணவர்களை வைத்துப் பூட்டிவிட்டு ஆசிரியை சென்றதை அடுத்துப் பிரதேச மக்கள் கல்வித் திணைக்களத்தினருக்கு அறிவித்தனர் என்றும், உடனடியாக அங்கு வந்த கல்வித் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்து முன்பள்ளியைத் தற்காலிகமாக மூடினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த முன்பள்ளியில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர் வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரின் விகிதாசாரப் பட்டியில் நியமிக்கப்பட்டவராவார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here