“எனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு… ஸாரி யாரையும் இன்வைட் பண்ணலை!’’ – `சரவணன் மீனாட்சி’ ப்ரியா

சத்தமில்லாமல் கல்யாணத்தை முடித்திருக்கிறார், `சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்த ப்ரியா. `ஜோடி’ ப்ரியா என்றால், இன்னும் பரிச்சயம். ரியல் ஜோடி கிடைத்ததற்கு, வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

“எங்களுக்கு நடந்தது அரேஞ்சுடு மேரேஜ். வீட்டுல ஜாதகம் பார்த்து எல்லாப் பொருத்தமும் அமைஞ்சு, ரெண்டு தரப்புலயும் எல்லா விஷயங்களும் பிடிச்சுப் போய் நடந்தது. சுந்தர் பிறந்தது தமிழ்நாடு. வளர்ந்தது மும்பை. கொஞ்ச நாள் லண்டன்ல வேலை பார்த்துட்டு மறுபடியும் தமிழ்நாட்டுக்கே வந்துட்டார். சென்னையில பிரபல கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்’’ என்கிறார் ப்ரியா.

‘பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்னாலும், இருவரின் முதல் சந்திப்பு `செம’ எதிர்பார்ப்பா இருந்திருக்குமே’ என்றோம்.

ப்ரியா

“அதை ஏன் கேக்கறீங்க. ஒரே ரகளையாப் போச்சு. ரெண்டு பேரும் முதன்முறையா என்கேஜ்மென்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஹோட்டல்ல சந்திச்சோம். நான் கொஞ்சம் படபடன்னு பேசற டைப். ஆனா, வீட்டுல, அவரைப் பார்த்ததும், லொடலொடன்னு பேசாதேன்னு சொல்லி விட்டாங்க. `வெட்கப் படற பொண்ணுங்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்’னு எக்ஸ்ட்ராவா என்னென்னவோ போட்டு விட்டாங்க. `வெட்கமா, அப்படீன்னா’னு கேக்கற எனக்கு ரொம்பவே கஷ்டமாப் போச்சு. அவரைச் சந்திச்ச அந்த நொடி, எவ்வளவோ ட்ரை பண்றேன்; வெட்கம் வந்தே தொலைய மாட்டேங்குது. அவரே என் நிலையைப் புரிஞ்சுகிட்டு, ஃ’பீல் ஃப்ரீ’ன்னு என்னை கம்ஃபர்ட் ஸோனுக்குக் கொண்டு வந்தார். பிறகு ரொம்ப நேரம் பேசிக் கலைஞ்சோம். அன்னைக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வரலை. `நான் வெட்கப்பட்டு அவர் ரசிக்க முடியாமப் போச்சேனு கவலையா இருந்துச்சு. அடுத்த சில நாள்கள்ல அதாவது என்கேஜ்மென்டுக்குப் பிறகு `லவ்வர்ஸ் டே’ வந்தது.

ப்ரியா

அந்த நாள் எனக்குப் பெரிசா எதுவும் தோணலை. ஆனா, விடிஞ்சும் விடியாததுமா அன்னைக்கு முதல் ஆளா மொபைல்ல கூப்பிட்டுட்டார். `என்ன காலையிலயே கூப்பிடுறீங்க’னு கேட்டதுக்கு, `நான் லவ் பண்ணத் தொடங்கிட்டேன். உங்க மனசுக்குள்ள இன்னும் நான் வரலையா’ங்கிறார். எனக்கே கொஞ்சம் கஷ்டமாப் போயிடுச்சு. அதைச் சரி செய்ய அன்னைக்குச் சந்திச்சோம். அவர் எனக்கு பெர்ஃப்யூம், நான் அவருக்கு ஷர்ட்னு கிஃப்ட் ஷேர் பண்ணி, எங்களோட முதல் காதலர் தினத்தை செலிப்ரேட் பண்ணினோம்’’ என்றவரிடம், `திருமணத்தை ஏன் சிம்பிளாக நடத்தினீர்கள்’ எனக் கேட்டால், `இந்த மாதிரியான விஷயங்களை ஃபெர்சனலா நினைக்கிறேன். அதனால எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்? ஜெனிஃபர் உள்ளிட்ட நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் பத்துப் பேரை மட்டும் கூப்பிட்டிருந்தேன். ஆனா, சடங்குகள் எதுவும் மிஸ் ஆகாதபடி அந்த மூணு நாளும் கொண்டாட்டமாவே இருந்திச்சு’’ என்கிறார்.

 

மணமுடித்த வேகத்தில் தாய்லாந்திலுள்ள `க்ராபி’ தீவுகளுக்குச் சென்று ஒரு வாரம் தேனிலவையும் கொண்டாடி வந்துவிட்டது இந்த ஜோடி.. “தாய்லாந்து லொகேஷன் சுந்தரோட சாய்ஸ். காலையிலேயும் ஈவ்னிங்லேயும் அந்த பீச்சை மனசுக்குப் பிடிச்சவரோட சேர்ந்து ரசிச்ச எக்ஸ்பீரியன்ஸ் லைஃப்லாங் மறக்காது’’ என்கிறார்.

ப்ரியா

அடுத்த சில மாதங்களுக்கு டிவிக்கு பிரேக் விடலாமென நினைத்து, கணவரிடம் அனுமதி கேட்ட ப்ரியாவுக்குச் சுந்தரிடமிருந்து கிடைத்த பதில். `உன் விருப்பம். அதேநேரம், சீரியலோ, ரியாலிட்டி ஷோவோ உன்னோட லைவ் பெர்ஃபார்மன்ஸ் பார்க்க நான் ஆவலா இருக்கேன். ரொம்ப வெயிட் பண்ண வைக்காதே’ என்பதுதானாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here