பாம்பை காட்டி கொள்ளையிட்டவருக்கு நடந்த கதி!

விசப் பாம்புகளை காட்டி பயமுறுத்திக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடு நுவான் என்கிற நுவான் குமாரா ஆலியாஸ் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குடு நுவான் பாம்பு பிடிக்கும் பழக்கத்தைக்கொண்டவர் எனவும் பாம்புகளை கயிறாக பயன்படுத்தி மக்களை கட்டிப்போட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் எனவும் கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்னாசி விற்பனை செய்துவந்த வர்த்தகர் ஒருவரிடம் பாம்புகளை காட்டிக் கொள்ளையிட முயன்றபோதே பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here