சாவகச்சேரியிலிருந்து மஸ்தான் எம்.பிக்கு இறைச்சியா?: நகரமத்தியில் சட்டவிரோத செயற்பாடு!

சாவகச்சேரி கொல்களத்தில் இன்றும் சட்டவிரோதமாக மாடுகள் வெட்டப்பட்டுள்ளன. தவிசாளரின் அனுமதியுடனே இந்த சட்டவிரோத செயற்பாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட சந்தையிலுள்ள மாட்டிறைச்சிக்கடையை முஸ்லிம் ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். சாவகச்சேரி சந்தைக்கு இறைச்சி அனுப்புகிறேன் என்ற போர்வையில் குடாநாட்டின் உள்ளேயும் வெளியேயும் பெருமளவு இறைச்சி இங்கிருந்து அனுப்ப்பட்டது. கொல்கலனின் வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட மாடுகளின் எண்ணிக்கையை விட அதிகளவான மாடுகள் அங்கு இரகசியமாக வெட்டப்படுகின்றன. முன்னைய நகரசபை, பொதுசுகாதார பரிசோதகர்கள் இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு கையூட்டு பெற்றிருக்காமல் இந்த சட்டவிரோத செயற்பாட்டை செய்ய வாய்ப்பில்லை. (அது தொடர்பாக தமிழ்பக்கத்தில் சில வாரங்களின் முன் வெளியான பதிவு இது. கிளிக் செய்து படியுங்கள்)

இதேவேளை, சட்டவிரோதமாக மாடுகளை வெட்டுவதற்கு முன்னர் அவற்றை அடைத்து வைக்க சாவகச்சேரி நகர மத்தியில் சட்டவிரோதமாக ஒரு கட்டிடம் கட்டி வைத்திருந்தனர். இந்த இடத்தில் அண்மையில் சோதனை நடத்தியபோது பசுமாடுகளும் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய தினம் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேலதிகமாக கொல்கலனில் மாடுகள் வெட்டப்பட்டபோது, கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி சந்தை இறைச்சிக்கடையின் தேவைக்கு இரண்டு மாடுகளே வெட்ட அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், பன்னிரண்டு மாடுகளை வெட்ட நகரசபை தலைவர் அனுமதியளித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவகச்சேரி நகரசபைக்குட்பட்ட இறைச்சிக்கடை தேவைக்கு 2 மாடுகளே போதுமென்றபோது, நகரசபை தலைவர் 12 மாடுகளை வெட்ட ஏன் அனுமதியளித்தார்?

நகரசபையில் இதைப்பற்றி அவர் தகவலெதுவும் வழங்கவில்லை.

இன்றையதினம் சுமார் இருவது வரையான மாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு, லொறியில் கொழும்பிற்கு அனுப்பப்படவிருந்த சமயத்தில் நகரசபையிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் அதிரடி நடவடிக்கையொன்று நடத்தி, கொல்கலனை சுற்றிவளைத்தபோது, இந்த சட்டவிரோத நடவடிக்கை அம்பலமாகியுள்ளது.

நேற்று முன்தினமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மாடுகள் வெட்டப்பட்ட நிலையிலேயே, இன்று சுற்றிவளைப்பு நடந்தது.

இதன்போது, மாட்டிறைச்சிக்கடையை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்- வவுனியாவிலுள்ள மஸ்தான் எம்.பிக்காக இந்த இறைச்சிக்களை அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள மாட்டிறைச்சிக்கடைகள் அனேகமானவை மஸ்தான் எம்.பியின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், கொழும்பிற்கு இறைச்சி அனுப்புவதும் அவரது கட்டுப்பாட்டின் கீழேயே நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here