அடுப்பு பற்ற வைக்க முயன்ற யாழ்ப்பாண யுவதி தீயில் கருகினார்!

0

புகைந்து கொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்ற யுவதியின் ஆடையில் தீப்பற்றி கொண்டதால் உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.  சீலன் அஸ்வினி (வயது 21) என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.

இணுவில் மேற்கில் கடந்த 8ம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

மதியம் சமைப்பதற்கு அடுப்பைப் பற்ற வைக்க முயன்றுள்ளார். ஏற்கனவே அணையாத அடுப்பை பற்ற வைக்க இவர் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். இதனால் தீப்பற்றி ஆடையில் பரவி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சத்தமிட்டு அலறிய அஸ்வினியை அயலிலிருந்தவர்கள்  மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கடந்த ஆறு நாட்களாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here