
இந்தியாவில் இஸ்லாமிய இராச்சியம் நிறுவப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது ஐ.எஸ் அமைப்பு.
ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அல் காஷ்மீரி என்ற முக்கிய ஆயுதக்குழு தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பெருமளவானவர்கள் ஐ.எஸ் அமைப்பின் கொடிகளுடன் வந்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று ஐ.எஸ் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “Wilayah of Hind” என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து ஐ.எஸ் அமைப்பு விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ஜம்மு, பாகிஸ்தான், ஆப்கான் பிராந்தியத்தில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
