“மாமியாரோட டிரெஸ் செலக்‌ஷனுக்குப் பின்னாடி நான் இருக்கேன்” – கீர்த்தி

வீஜே கீர்த்திக்கு அறிமுகம் தேவையில்லை. சேனல்களில் பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். இவர் தொகுத்து வழங்கிய `மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். `ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, குழந்தைகளின் ஃபேவரைட் அக்காவாக வலம்வந்தார். தற்போது, என்ன பிளானில் இருக்கிறார்?

கீர்த்தி சாந்தனு

“உங்களை ஃபேவரைட் வீஜே என எல்லோரும் சொல்றது எபப்டி ஃபீல் பண்றீங்க?”
“அப்படியா? எனக்கே தெரியலைங்க. எனக்குள் ஒரு சென்டிமென்ட் இருக்கு. நான் தொகுத்து வழங்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும். அதனால், எந்த ஆஃபர் வந்தாலும் யோசிச்சே ஒப்புக்குவேன். அதுமாதிரி ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக இப்போ வெயிட் பண்ணிட்டிருக்கேன்.”

“ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் பற்றி…”
“முதல் சீசனில் 23 குழந்தைகளுடன் உண்டான அனுபவம், இரண்டாவது சீசனின் 23 குழந்தைகளை இன்னும் ஈஸியா சமாளிக்க உதவிச்சு. ஷூட்டிங், பிரேக் டைம் என எல்லா நேரத்திலும் குழந்தைகளோடுதான் இருப்பேன். `உங்களுக்கு ஏற்ற இடம் அதுதான் அங்கேயே உட்கார்ந்திருங்க’னு செட்டில் கலாச்சு அனுப்புவாங்க. அங்கே போய்ட்டா நானும் குழந்தை மாதிரி ஆகியிருவேன். எல்லாக் குழந்தைகளுக்கும் நடுவில் உட்கார்ந்து ஷோ பண்ணுவேன். அப்போ, என் கம்மலை தொட்டுப் பார்க்கிறது, வளையலைத் தொட்டுப் பார்க்கிறதுன்னு குறும்பு பண்ணிட்டே இருப்பாங்க. அவங்களோடு இருக்கும்போது நேரம் ஓடுறதே தெரியாது. ஐ ரியலி மிஸ் தெம்.”

“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன?”
“எனக்கு இன்டீரியர் டிசைனிங் ரொம்ப பிடிச்ச விஷயம். ஷூட் இல்லாத சமயங்களில் வீட்டில் இன்டீரியர் டிசைனிங்கில் என்ன மாற்றலாம், வீட்டை இன்னும் அழகா எப்படி வடிவமைக்கலாம்னு யோசிச்சுட்டே இருப்பேன். டான்ஸ் ஆடறதிலும் அவ்வளவு இஷ்டம். கொஞ்ச நாளா ரெகுலரா டான்ஸ் ஆடாமல் இருந்தாலும், கிரேஸ் கொஞ்சமும் மாறலை. ஃபேஷன் சம்பந்தமா அப்டேட்ஸ் தெரிஞ்சுவெச்சுப்பேன்.”

கீர்த்தி

“சாந்தனு பற்றி நாலு வரியில் சொல்லுங்க…”
“ரொம்பவே ஹார்டு ஒர்க் பர்சன். எந்த வேலையிலும் தன்னை முழுமையா ஈடுபடுத்திப்பார். அவரின் கடின உழைப்புக்கு ஒருநாள் நிச்சயம் பலன் கிடைக்கும். அவர் பாசிட்டிவ் பர்சன். மன அழுத்தத்தோடு இருந்தாருன்னா, லாங் டிரைவ் கிளம்பிடுவோம். நான் வண்டி ஓட்ட அவர் நல்லா தூங்கிடுவார். எழுந்ததும் எல்லாக் கவலையையும் மறந்து உற்சாகமாகிடுவார். இப்போ, மிஸ்கின் சார்கிட்ட இருந்து எதிர்பார்க்காத ஒரு புராஜெக்ட் வந்திருக்கு. சாந்தனுவின் திறமையை இந்தப் படம் மூலம் எல்லோரும் தெரிஞ்சுப்பாங்கன்னு நம்பறேன்.”

“உங்கள் மாமியார் பூர்ணிமா பற்றி..”
“மாமியார்தான் என் பெஸ்ட்டி. எங்களுக்குள் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிப்போம். சாந்தனுகிட்டேயே சொல்லாத சில விஷயங்களை மாமியார்கிட்டே பகிர்ந்துப்பேன். எந்த காஸ்டியூம் அவங்களுக்கு செட்டாகும்னு என்னை செலக்ட் பண்ண சொல்வாங்க. ரொம்ப சிம்பிள் பர்சன். அதேமாதிரி, என் வேலைகளை முடிச்சுட்டு ஆச்சி (சாந்தனு பாட்டி) ரூமுக்குப் போய் பேசிட்டிருப்பேன். அவங்க செம்ம கூல் பர்சன். அவங்களோடு பேசினால், டென்சன் எல்லாம் பறந்துடும்.”

கீர்த்தி

“லவ்வர்ஸ் டே அன்னைக்கு செம்மையா கொண்டாடினீங்களாமே…”
“பிப்ரவரி மாதத்தில்தான் என் பிறந்தநாள். அதைப் பெருசா கொண்டாடறதால், எப்பவும் லவ்வர்ஸ் டே கொண்டாடினது கிடையாது. ஆனால், இந்த முறை சாந்தனு பிளான் பண்ணி துபாய்க்குக் கூட்டிட்டுப் போனார். லவ்வர்ஸ் டே அன்னைக்கு ஹாட் ஏர்பலூனில் பறக்கறதுக்கு புக் பண்ணியிருந்தார். விடியும் நேரத்தில் சன் ரைஸைப் பார்த்துக்கிட்டே பறக்கும் பிளான். சுமார் 4000 அடி உயரத்துக்கு மேல பறக்கப்போறோம்னு என்ஜாய்மென்ட்ல போனோம். ஆரம்பத்தில், பயங்கர குளிரில் என்னால எதுவும் பண்ண முடியலை. ஆனால், கொஞ்சம் வெயில் வந்ததும் மேலிருந்து பார்த்தபோது அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. மறக்கமுடியாத டிரிப்ல இதுவும் ஒரு முக்கிய இடத்தைப் பிடிச்சிருச்சு.”

“சினிமா மற்றும் சீரியலில் கீர்த்தியை எதிர்பார்க்கலாமா?”
“நான் எப்பவும் எந்த பிளானும் போட்டு செய்யறதில்லே. நிறைய சீரியல், சினிமா வாய்ப்புகளும் வந்துட்டுதான் இருக்கு. தொகுப்பாளரா இருக்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒருவேளை, நடிகை ஆகணும்னு ஒரு விருப்பம் எனக்குள் வந்தால் பார்க்கலாம். இப்போதைக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லைன்னுதான் சொல்வேன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here